தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைவதாகவும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி உட்பட 45 சீட் ஒதுக்கு முன்வந்துள்ளதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் தகவல்கள் பரவுகிறது. ஆனால் இதனை தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்கள் மறுத்த நிலையில் தற்போது தமிழக வெற்றிகழகத்திலிருந்து விளக்கம் வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் கூறியதாவது, சில ஊடகங்களிலும் செய்திகளிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டே பொய் செய்திகளை பரப்புகிறார்கள். அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை.

சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோருடன் நடிகர் விஜய் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் ஆதாரம் அற்றவை மற்றும் வதந்தி. கூட்டணி தொடர்பாக பொறுப்புள்ள ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் உண்மை தன்மையை ஆராயாமல் இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் சசிகலா கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் ராமதாஸ் இன்று கூட்டணி முடிவை வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து தற்போது கூட்டணி தொடர்பான ஒரு அறிவிப்பு வந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.