இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கும் போது வாகனங்களின் விலையை உயர்த்துவது நிறுவனங்களின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், வரும் 2026 ஏப்ரல் 1 முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை சுமார் 2 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து மற்ற கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்களும் விரைவில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு புதிய வாகனங்களை வாங்குபவர்கள் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும்.
எனவே, இந்த கூடுதல் சுமையைத் தவிர்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மார்ச் மாதத்திலேயே வாகனங்களை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த மாதத்தில் வாகன விற்பனை மற்றும் முன்பதிவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வாகனம் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் மார்ச் இறுதிக்குள் முடிவெடுப்பது லாபகரமாக இருக்கும்.
