தமிழக அரசியலில் தவெக மற்றும் நாதக இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நேற்று (மார்ச் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக நிர்வாகிகளைச் சாட்டை துரைமுருகன் விமர்சிப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாகப் பதிலளித்த சீமான், “விஜய் தனித்து விடப்பட்டதால்தான் தனித்து நிற்கிறார்; எங்களைப் பொறுத்தவரை தவெகவினர் முதலில் கண்ணியமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சாடினார்.

தவெகவினர் சமூக வலைதளங்களில் நாதக தம்பிகளைப் பற்றி அவதூறாகப் பேசி, தேவையில்லாத சேட்டைகளைச் செய்து வருவதாகவும், அதற்குப் எதிர்வினையாகவே விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 தேர்தலை நோக்கி நகரும் வேளையில், தம்பி – அண்ணன் உறவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.