உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் மருத்துவ உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதான கரண் என்ற மாணவன், திடீரென மனித இயல்புகளை மறந்து ஒரு நாய் போலவே நடந்துகொள்வது ஊர் மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. அவன் நாயைப் போல குரைப்பதும், நான்கு கால்களில் நடப்பதும், தண்ணீரைக் கண்டால் அலறுவதும் என அவனது செயல்கள் காண்போர் ரத்தத்தை உறைய வைக்கின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் அதைவிட அதிர்ச்சியானது.

​சுமார் 4 மாதங்களுக்கு முன்பு கரணை ஒரு நாய் கடித்தபோது, அவனது குடும்பத்தினர் அதைச் சாதாரணமாக நினைத்து முழுமையான தடுப்பூசிகளைப் போடாமல் விட்டுள்ளனர். “வெறும் ரெண்டு ஊசிதானே போட்டோம்.. மீதி அப்புறம் பாத்துக்கலாம்!” என அலட்சியமாக இருந்ததன் விளைவு, இன்று ‘ஹைட்ரோபோபியா’ (Hydrophobia) என்ற கொடிய நிலைக்கு அந்தச் சிறுவனைத் தள்ளியுள்ளது. அவனது நரம்பு மண்டலத்தை ரேபிஸ் வைரஸ் முழுமையாக ஆக்கிரமித்ததால், சுவாசக்குழாய் சுருங்கி அவனது குரல் நாய் குரைப்பதைப் போலவே மாறிவிட்டது.

“இனி அவனைக் காப்பாற்ற வாய்ப்பே இல்லை!” என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், தந்தை தன் மகனைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து கண்ணீர் விடுவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.