தமிழ் சினிமாவில் ‘குட்டி குஷ்பு’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது திருமண வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துள்ள செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யுடன் ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான சோஹைல் கதுரியாவை ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், தற்போது இருவருக்கும் நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது விவாகரத்து ஒப்பந்தத்தில் முன்னாள் கணவர் சோஹைல் கதுரியாவிடம் இருந்து ஹன்சிகா ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சமாகப் பெறவில்லை என்பதுதான்.

“பணம் முக்கியமல்ல, நிம்மதிதான் முக்கியம்” என்கிற ரீதியில் ஹன்சிகா எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

2024-ல் வெளியான ‘கார்டியன்’ படத்திற்குப் பிறகு ஹன்சிகா தனது திரைப்பயணத்தில் மீண்டும் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.