இந்தியாவில் கிடைக்கும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் மிகக் குறைந்த விலையைப் பாராட்டி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கார்ல் ஆண்ட்ரூ ஹார்ட் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது.

இந்திய மருந்தகங்களில் விற்கப்படும் பொதுவான மருந்துகளின் விலையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள அவர் அங்கு அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகள் இந்தியாவில் மிக மலிவாகக் கிடைப்பதைக் கண்டு தாம் வியப்படைவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Carl Andrew Harte (@carlandrewharte)

குறிப்பாக மற்ற நாடுகளில் அதிகப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகள் இந்தியாவில் குறைந்த விலையிலேயே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதைப் பார்த்த இணையதளப் பயனாளர்கள் அரசு நடத்தும் மக்கள் மருந்தகங்களுக்குச் சென்றால் இன்னும் 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் தரமான மருந்துகளைப் பெற முடியும் என்று அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்திய மருந்துத் துறையின் இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.