சமூக வலைதளங்களில் எப்போதுமே பெண்கள் சார்ந்த கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், ரவி மோகன் பதிவிட்டுள்ள ஒரு பதிவு தற்போது பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. “இங்கு உண்மையில் ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள், அதை நம் நீதித்துறையும் உணர்ந்துள்ளது” என்று அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். எப்போதுமே பெண்கள் மட்டுமே சரி என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பவர்களைச் சாடியுள்ள அவர், ஆண்களின் வலியைச் சமூகம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.
மேலும், தனது அன்புக்குரியவர்களுக்காகத் தான் செய்த தியாகங்கள் ஒருநாள் புரியும் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ள ரவி மோகன், “கசப்பான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள், என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று மிகக் கடுமையாகப் பதிவிட்டுள்ளார். “நான் என் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறேன்” என்று அவர் கூறியிருப்பது, இனி யாரைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்ற அவரது உறுதியான முடிவைக் காட்டுகிறது. ரவி மோகனின் இந்த எமோஷனல் மற்றும் அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
