அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சில நொடிகள் தனது எல்லைக்கோட்டை விட்டு வெளியே வந்தபோது அர்ஷ்தீப் சிங் அந்தப் பந்தை மீண்டும் அவர் மீது வீசினார்.
India pacer fined for breaching the ICC Code of Conduct during the #T20WorldCup Final.https://t.co/NbnGMkIbzE
— ICC (@ICC) March 10, 2026
இது அந்த வீரரின் மீது பட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலையிட்டு சமாதானம் செய்தார்.
போட்டி முடிந்த பிறகு அர்ஷ்தீப் சிங் நேரில் சென்று மன்னிப்பு கோரிய போதிலும் இந்தச் செயலை ஆபத்தானது எனக் கருதிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளதுடன் அவரது கணக்கில் ஒரு குறைபாட்டுப் புள்ளியையும் சேர்த்துள்ளது.
