இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா, டி20 உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில், திலக் வர்மா எங்குச் சென்றாலும் அந்தக் கோப்பையைத் தனது கைகளிலேயே ஏந்தியபடி இருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சாப்பிடும் இடமாகட்டும், பயணம் செய்யும் இடமாகட்டும் – ஒரு நிமிடம் கூட உலகக்கோப்பையைத் தரையில் வைக்காமல் அவர் சுமந்து செல்வது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

​இந்த இளம் வீரரின் அளவற்ற மகிழ்ச்சியும், நாட்டுக்காக வென்ற கோப்பையின் மீது அவர் வைத்துள்ள பற்றும் இணையவாசிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த தலைமுறை வீரர்கள் இந்தக் கோப்பையை எவ்வளவு பெருமையாகக் கருதுகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ “கப் முக்கியம் பிகிலு” என்கிற ரேஞ்சுக்கு ட்ரெண்டிங்கில் உள்ளது.