தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய கூட்டணி மாற்றம் டெல்லியில் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யைச் சுற்றி திமுக விடுத்துள்ள பல்வேறு நெருக்கடிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக மேலிடம், விஜய்க்கு ஒரு அதிரடிச் சலுகையை முன்வைத்துள்ளது. அதன்படி, அதிமுக-விஜய்-பாஜக கூட்டணி அமைந்தால், இரண்டரை ஆண்டுகள் விஜய் முதலமைச்சர், அடுத்த இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்ற ‘பதவிப் பங்கீடு’ அஸ்திரத்தை அமித் ஷா வீசியுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆரம்பத்தில் தயக்கம் காட்டப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் இதுவே வெற்றிக்கான வழி என பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது.
மறுபுறம், நிதி நெருக்கடி மற்றும் தேர்தல் களம் குறித்த கவலையில் இருந்த விஜய்க்கு, இந்த முதலமைச்சர் பதவி ஆஃபர் ஒரு பெரிய வாய்ப்பாகத் தெரிகிறது. விஜய்யின் இளைய தலைமுறை வாக்குகள் மற்றும் எடப்பாடியின் பலமான வாக்கு வங்கி இணைந்தால், அது திமுக-வின் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘பூகம்பம்’ வெடிக்கக் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
