அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மது ராஜு ஆடிய நடனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போரில் உயிரிழந்த வீரர்களைக் கௌரவிக்கும் அந்தப் புனிதமான இடத்தில் அவர் வீடியோ எடுத்தது நினைவிடத்தை அவமதிக்கும் செயல் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
An Indian-origin TikToker, Madhu Raju, may face deportation from US after a video of him dancing at the World War II Memorial in Washington DC went viral.
US immigration authorities are reportedly reviewing his visa status. pic.twitter.com/71f93UD7Bh
— News Algebra (@NewsAlgebraIND) March 8, 2026
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அமெரிக்கக் குடிவரவுத் துறை அதிகாரிகள் மது ராஜுவின் விசா நிலையைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் (Deportation) சூழல் உருவாகியுள்ளது. ஒரு சிறிய வீடியோ பதிவிற்காக அவர் செய்த காரியம், தற்போது அவரது வேலையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
