விஜய் தனது விவாகரத்து விவகாரம் குறித்து “அது ஒன்றும் ஒர்த்தே (Worth) இல்லை” என்று மகளிர் தின மேடையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், “விவாகரத்து என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயம்; அதை இவ்வளவு எளிதாகக் கூறுவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒருபுறம் மனைவி நீலாங்கரை வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டு நீதிமன்றக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில், மனைவியின் வலியை உணராமல் வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்குத் தனிப்பட்ட ஒழுக்கம் மிக முக்கியம். விஜய் இன்னும் தன்னை ஒரு அரசியல் தலைவராக மாற்றிக்கொள்ளவில்லை; நடிகராகவே இருக்கிறார்” என்று காரசாரமாக விமர்சித்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் திராவிடக் கட்சிகள் ஒருபுறம் விமர்சித்து வரும் நிலையில், அவரது சொந்தத் துறையைச் சேர்ந்தவர்களே அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
