தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகிய இரு தரப்பு ஆதரவாளர்களிடையே சமூக வலைதளப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன், ‘தலைவா’ பட வெளியீட்டுச் சிக்கலின் போது விஜய் ஜெயலலிதாவிடம் கைகட்டி மன்னிப்பு கேட்டதாகக் கூறி, அதனைப் பலமுறை மேடைகளில் நடித்துக் காட்டி விமர்சனம் செய்து வந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், த.வெ.க ஆதரவாளர் ஒருவர் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி வசூலை மையமாக வைத்து ஒரு கிண்டல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சீமான் பேசும் அதே உடல்மொழி மற்றும் குரலில் ஒரு இளைஞர் பேசுகிறார். “என் அருமை உடன்பிறப்புகளே, அன்புச் சொந்தங்களே.. மாசக் கடைசி ஆகிவிட்டது! வீட்டு வாடகை 2 லட்சம் கட்ட வேண்டும், பையன் அமெரிக்க இன்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்கிறான், அதற்கு ஒரு லட்சம் கட்ட வேண்டும். அதுபோக வீட்டில் வளர்க்கும் ஃபாரின் நாய்க்குச் சோறு போட வேண்டும். அதனால் என் தாய், தந்தை உறவுகளே.. சீக்கிரம் நிதி போட்டு விடுங்க!” என்று சீமானின் பாணியிலேயே அவரைப் பகடி செய்துள்ளார்.
பிச்சை போடு உறவே🐢😂😂.. #TVKVijay #TVKforTN2026 #TVKWomensDayEvent pic.twitter.com/OJZ5lwfLQJ
— anushiya (@anushiyaxx) March 8, 2026
“>
சாட்டை துரைமுருகனின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது த.வெ.க மற்றும் நா.த.க தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் வைரல் ட்ரெண்டையும் ஏற்படுத்தியுள்ளது.
