நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
குறிப்பாக, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் பொதுவெளியில் அனல் பறக்கின்றன. இந்நிலையில், பெண் ஒருவர் விஜய்யின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், “தன் கேரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிப்பை விட்டுவிட்டு வந்த மனைவி சங்கீதாவை விட்டு வரத் தெரிந்த விஜய்க்கு, திரிஷாவை மட்டும் விட்டு வரத் தெரியவில்லையா?” என்று மிக ஆவேசமாக ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விவாகரத்து என்பது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், முறையாக விவாகரத்து செய்யாமல் மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும்போதே மற்றொருவருடன் தொடர்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளார்.
சரியான கேள்வி..கேரியரின் உச்சத்தை விட்டு வந்தவர் ஏன் த்ரிஷாவை விட்டு வர மறுக்கிறார் pic.twitter.com/RXr1DLF0El
— உளவாளி (@withkaran) March 8, 2026
“>
“திரிஷா தான் பிடிக்கும் என்றால் விஜய் தான் முதலில் விவாகரத்து கோரியிருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்யாமல் மனைவியை அவமதித்தது தவறு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் திரிஷாவுடன் புகைப்படம் எடுப்பது அவசியமா? என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய்யின் இத்தகைய செயல்களைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களை “தற்குறிகள்” என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வைரலாகி வருகிறது.
