தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாகச் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷாவுடன் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் வலுத்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் திரிஷா குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பார்த்திபன் சில கவிதைகளை ரசிக்க மட்டுமே முடியும் என்றும் அவற்றை வெளிப்படையாக வாசிக்க முடியாது என்றும் மர்மமாகப் பதிலளித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Whistle Blower (@whistleblower_media)

அவரது இந்த சூசகமான பேச்சு விஜய்யைச் சுற்றியுள்ள தற்போதைய வதந்திகளுக்கான மறைமுகப் பதிலாக இருக்கலாம் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பார்த்திபனின் இந்த அணுகுமுறையை விஜய்யின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.

பார்த்திபனும் அவரது முன்னாள் மனைவி சீதாவும் விவாகரத்து பெற்றுப் பிரிந்திருந்தாலும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கண்ணியக்குறைவாகப் பேசிக்கொண்டதில்லை என்பதைப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அவரது மனைவி சங்கீதா பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படும் செய்திகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யைச் சுற்றித் தொடர்ந்து இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருவது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.