சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, டீ மற்றும் காபியின் விலையை தற்போது உயர்த்தப் போவதில்லை என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, கடைகளில் தரமான சேவையை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் லாபத்தை விட சேவையே முக்கியம் என்றும், தரத்தை முறையாகப் பராமரித்த பிறகே வருங்காலத்தில் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
