இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் குடும்பத்தில் மற்றொரு பெருமிதமான தருணம் நிகழ்ந்துள்ளது. அவரது தாய்மாமா அபிஷேக் சவுகான் (27), மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 102-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் UPSC தேர்வை, அபிஷேக் சவுகான் தனது முதல் முயற்சியிலேயே எதிர்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய காவல் பணிக்கு (IPS) தேர்வாகியுள்ளார்.
சிறு வயதிலேயே கிரிக்கெட் களத்தில் சாதனைகள் படைத்து வரும் மருமகன் வைபவ் சூர்யவன்ஷி ஒருபுறம் இருக்க, தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்றுள்ள மாமா அபிஷேக் சவுகானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விளையாட்டு மற்றும் கல்வி என இரு வேறு துறைகளில் தேசிய அளவில் சாதித்திருப்பது பலருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
