2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது குறித்து விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் ரன் ரேட் காரணத்தால்தான் வெளியேறினோம்” என்று அவர் அசால்ட்டாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்திய அணி விளையாடும் விதத்தைப் பாருங்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு, “நான் இந்திய அணியின் போட்டிகளைப் பார்ப்பதே இல்லை” என்று ரிஸ்வான் தெனாவெட்டாகப் பதிலளித்தது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகியுள்ளது.

​இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வீரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, 2027 ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு பாபர் அசாம் உள்ளிட்ட சீனியர் வீரர்களை அணியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 6 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024-ல் இதுபோல் செய்துவிட்டு மீண்டும் பழைய வீரர்களையே சேர்த்த பாகிஸ்தான், இந்த முறையாவது தனது முடிவில் உறுதியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.