சோஷியல் மீடியாவில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை மிரள வைத்துள்ளது.
உலகின் சில இடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அங்குச் செல்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு கடற்கரையில் உள்ள பெரிய பாறை இடுக்குகளில் நூற்றுக்கணக்கான பாம்புகள் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
முதலில் ஒன்றிரண்டு பாம்புகள் மட்டுமே தெரிக்கின்றன, ஆனால் கேமராவைச் சுழற்றினால் அந்தப் பாறை முழுவதும் பாம்புகளின் கூடாரமாக இருப்பதைப் பார்த்து வீடியோ எடுத்தவரே அதிர்ச்சியடைந்துள்ளார்.
எந்த இடம் என்பது சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த “பாம்புத் தீவு” போன்ற கடற்கரை வீடியோ @AMAZlNGNATURE என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு, இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
பாம்புகளைப் பார்த்தாலே அலறி ஓடும் தைரியசாலிகள் கூட, இந்த வீடியோவை பார்த்தால் ஒரு நிமிடம் ஆடிப் போய்விடுவார்கள். இந்த இடத்திற்குத் தவறுதலாகக் கூட யாரும் சென்றுவிடக் கூடாது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
