சாலையில் வேகமாக வந்த காரை வெறித்தனமாக விரட்டிச் சென்ற தெருநாய் ஒன்று, எதிர்பாராத விதமாக அங்கு மூடி இல்லாமல் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடையில் விழப்போனது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த நாய் பாதாளச் சாக்கடைக்குள் சிக்கி உயிரிழந்திருக்கும். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காரை நிறுத்திய அதன் உரிமையாளர், எவ்வித சுயநலமுமின்றி மின்னல் வேகத்தில் செயல்பட்டு, சாக்கடையில் விழப்போன அந்த நாயை லாவகமாகப் பிடித்துக் காப்பாற்றியுள்ளார்.
A veces un pequeño gesto puede cambiarlo todo. Todavía existen personas que demuestran que la empatía no se ha perdido.
¿Crees que aún quedan muchos así? pic.twitter.com/zLPRcx6bf5
— Momentos Virales (@momentoviral) March 6, 2026
தன்னைத் துரத்தி வந்த நாய் என்றும் பாராமல், ஒரு உயிர் காக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் அந்த நபர் செய்த இந்த உதவி இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த நாய் சாக்கடையில் விழும் கடைசி நொடியில் அவர் காட்டிய வேகம் மற்றும் துணிச்சலைப் பார்த்து நெட்டிசன்கள் மெய்சிலிர்த்துப் போயுள்ளனர். “இதுதான் உண்மையான ஹீரோயிசம்” எனப் பலரும் அந்த காரின் உரிமையாளரைப் பாராட்டி வருகின்றனர்.
