இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து, தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரபலம் என்றால் யார் என்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ஒரு மனிதனுக்கும் அவரைப் பற்றி மக்கள் வைத்துள்ள எண்ணத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலையே பிரபலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதுதான் நீங்கள் என்று நம்பத் தொடங்கினால், நீங்கள் பெரிய சிக்கலில் இருப்பதாக அர்த்தம் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த கருத்து தற்போது நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் வெளியாகி வரும் சூழலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
What is a celebrity?
There is You and people’s perception of You that makes you a celebrity. Once you start thinking you are people’s perception and abandon the You… You are in serious trouble.— kiruthiga udhayanidh (@astrokiru) March 7, 2026
சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கிருத்திகா உதயநிதியின் இந்தப் பதிவு விஜய்க்கு ஆதரவானதா அல்லது அவரை விமர்சிக்கும் நோக்கில் பதிவிடப்பட்டதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சினிமா மற்றும் அரசியலில் இருப்பவர்கள் மக்களின் எண்ணத்திற்காகவே வாழ்ந்தால் சொந்த வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம், விஜய்யின் தற்போதைய நிலையை அவர் மறைமுகமாகக் கேலி செய்வதாகவும் மற்றொரு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்.
கிருத்திகா உதயநிதி கடைசியாக இயக்கிய படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், தற்காலக் காதல் மற்றும் ஈகோ மோதல்களைப் பற்றி அந்தப் படத்தில் அவர் விரிவாகப் பேசியிருந்தார். தற்போது அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் பொதுப்படையாக ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ள போதிலும், அது விஜய்யின் விவாகரத்து விவகாரத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.
மக்கள் உங்களைப் பற்றி வைத்துள்ள பிம்பமாகவே நீங்கள் மாறத் துடிக்கும்போது உங்கள் உண்மையான அடையாளத்தை இழக்க நேரிடும் என்கிற அவரது எச்சரிக்கை, சமூக வலைதளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
