அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ உலகையே அதிர வைக்கும் ஒரு ரகசியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான எஃப்.பி.ஐ (FBI) ஆவணங்களில், பெண் ஒருவர் அளித்த வாக்குமூலம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்தப் பெண் தனக்கு 13 முதல் 15 வயது இருக்கும்போது, எப்ஸ்டீன் தன்னை டிரம்பிற்கு அறிமுகப்படுத்தியதாகவும், அப்போது டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தச் சமயத்தில் அவரிடமிருந்து தப்பிக்க, தான் டிரம்பின் ஆணுறுப்பைக் கடித்ததாக அந்தப் பெண் மிகக் கொடூரமான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்த ஆவணங்கள் ‘தவறானவை’ என்று கூறி மறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனநாயகக் கட்சியினரின் அழுத்தத்தால் இவை பொதுவெளியில் கசிந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து மிரட்டல்கள் வருவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விபரங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், தனக்கு எப்ஸ்டீனைத் தெரியவே தெரியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

ட்ரம்ப்பை எப்படியாவது காப்பாற்ற அமெரிக்க நீதித்துறை உண்மைகளை மூடி மறைப்பதாக எதிர்க்கட்சிகள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளதால், அமெரிக்க அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.