தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தற்போது விவாகரத்து வழக்காக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இது தனக்கு 2021-ம் ஆண்டு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தட்டிக்கேட்டபோது விஜய் தனது உரிமைகளைப் பறித்ததாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாங்கள் மனதளவில் பிரிந்து வாழ்வதாகவும் அவர் அந்த மனுவில் மிகத் தெளிவாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில், சென்னையில் இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் வந்து இறங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒரே நிறத்தில் பட்டு உடைகள் அணிந்து ஜோடியாக வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்ட அந்த நடிகை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.
