நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஜவகர் அலி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இலவு காத்த கிளி’ போல விஜய் இன்னும் காங்கிரஸ் கட்சிக்காகக் காத்திருப்பதாகக் கூறிய அவர், விஜய்க்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை என்றும் சாடினார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த ஜவகர் அலி, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்வதே அதிமுகவின் குறிக்கோள் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.