தஞ்சாவூரில் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் விஜய் தனது உரையின் போது, மற்ற அரசியல்வாதிகளைப் போலப் போலியாகப் பேச மாட்டேன் என்று அதிரடியாகத் தெரிவித்தார். “எனக்கு விவசாயம் பற்றி முழுமையாகத் தெரியாது, அதற்காக நான் ஒரு டெல்டா காரன் தான் என்று உங்கள் காதுல டால்டா ஊத்த நான் வரவில்லை” என்று வெளிப்படையாகப் பேசினார்.
தனக்கு விவசாய நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும் விவசாயிகள் படும் கஷ்டம் நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் கட்சியின் முதல் அரசியலே பரந்தூர் விவகாரத்தில் இருந்துதான் தொடங்கியது என்பதை நினைவுபடுத்தினார். தங்களின் ஆட்சி அமைந்ததும் முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையே முதலிடத்தில் இருக்கும் என்று தஞ்சை மண்ணில் இருந்து உறுதி அளித்தார்.
