தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தனது வாகனத்தில் புறப்பட்டு செங்கிப்பட்டியில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த விஜய் தனது தோளில் பச்சை நிறத் துண்டு அணிந்து வந்து நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரு விவசாய பூமி என்பதால் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு பச்சைத் துண்டுடன் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்யின் இந்த புதிய தோற்றம் அவரது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
