தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் நிறைவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாகத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து வருகிறது.
பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடைமுறைகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், வரும் மார்ச் 10-ம் தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் இதற்கான எதிர்பார்ப்புகள் இப்போதே அதிகரித்துள்ளன.
