அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் எப்ஸ்டீனின் தீவில் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், கிளிண்டன் இதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஒரு ஆசியப் பயணத்தின்போது, புரூனே நாட்டில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்த ‘ஹாட் டப்’-பில் (Hot Tub) வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது எடுக்கப்பட்ட படம் இதுவென அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அங்கிருந்தவர்கள் அவரது பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் யாரும் மைனர் கிடையாது என்றும், அங்கு எந்தவிதமான பாலியல் நடவடிக்கைகளும் நடக்கவில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
