திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் 39 தொகுதிகள் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்ற காங்கிரஸ், தற்போது 36 தொகுதிகள் போதும் என இறங்கி வந்துள்ளது. அதேபோல், 25 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்த திமுக, இப்போது 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் என மொத்தம் 31 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது.

​இரு தரப்பிலும் விட்டுக்கொடுத்துச் சென்றதால், பல நாட்களாக நீடித்து வந்த இந்தப் பேச்சுவார்த்தை தற்போது சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளதுடன், தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த ‘டீல்’ முடிவுக்கு வந்திருப்பது கூட்டணித் தொண்டர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.