2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப்பிறகு அவரது சொத்து மதிப்பு மற்றும் கல்வித் தகுதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி கல்வியிலும் ஆர்வம் கொண்ட அவர், தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார்.

சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு 2026-ஆம் ஆண்டில் சுமார் 90 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி அவரை 18 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது அவரது வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

தோனி, ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு நிகரான ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சஞ்சுவிடம் ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற விலையுயர்ந்த கார்கள் உள்ளன. விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் மூலமும் அவருக்கு பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது.