தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக அதிமுக-வின் அடையாளமாகத் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS),  முறைப்படி திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

“>

ஓபிஎஸ்-ஸின் வருகையை முன்னிட்டு, அவரது வீட்டின் முகப்பு வாயிலில் நீண்டகாலமாகப் பொறிக்கப்பட்டிருந்த அதிமுக-வின் ‘இரட்டை இலை’ சின்னம், வெல்டிங் இயந்திரம் கொண்டு அடியோடு அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வீட்டின் சுற்றுச் சுவர்களில் இருந்த அதிமுக-வின் முவர்ண (கருப்பு – வெள்ளை – சிகப்பு) வண்ணங்கள் உடனடியாக நீக்கப்பட்டு, திமுக-வின் இருவர்ண (கருப்பு – சிகப்பு) வண்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் ‘அதிமுக-வின் கோட்டை’ என்று அழைக்கப்பட்ட ஓபிஎஸ்-ஸின் இல்லம், இப்போது முழுமையாக ‘உதயசூரியன்’ நிறத்திற்கு மாறி வருவது தேனி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.