தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சுமார் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பதாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் அந்த உறவைத் தொடர்வதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி விஜய்யின் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய்யின் நீண்டகால நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பாலாஜி, “எதுவும் மாறட்டும்… உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது.

மேலும் இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம், கலங்காதே நண்பா… உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி, தற்போது லட்சிய ஜனநாயகக் கட்சியில் இருக்கும் தாடி பாலாஜி, தனது நண்பருக்காக இச்சமயத்தில் முன்வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.