2026 டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைக் கூறி அதிரடி கிளப்பியுள்ளார். இந்த முறை கோப்பையை வெல்லப்போகும் அணிகள் பட்டியலில் இந்தியாவை அவர் சேர்க்கவில்லை. மாறாக, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளே இந்த சீசனில் மிகவும் பலமாக இருப்பதாகவும், அவைதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகள் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

​தென் ஆப்பிரிக்கா அணி இந்தத் தொடரில் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. அதேபோல், இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் திகழ்வதாக கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே அரையிறுதி வாய்ப்புக்காக கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இந்தியாவின் லெஜண்ட் ஒருவரே இந்தியாவைத் தவிர்த்துவிட்டு மற்ற அணிகளைத் தேர்வு செய்திருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.