தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி லண்டனில் வசிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான சங்கீதாவை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதில் சஞ்சய் தற்போது இயக்குனராக ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் சங்கீதா தற்போது விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருக்கிறது. அதாவது ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் நடிகர் விஜய் இருந்ததாகவும் அது தன்னை மனதளவில் பாதித்ததாகவும் விவாகரத்து மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் திருமணத்தை மீறிய உறவில் அந்த நடிகையுடன் இருந்தது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே தனக்கு தெரிய வந்தது. எனக்கு அந்த விஷயம் தெரிந்ததால் நடிகர் விஜய் அந்த நடிகையுடன் ஆனால் உறவை முறித்துக் கொள்வதாக எனக்கு உறுதியாக வாக்கு கொடுத்தார். இருப்பினும் இரக்கமே இல்லாமல் அந்த நடிகையுடன் அவர் உறவைத் தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன்.

எனவே எனக்கு விவாகரத்து வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விஷயம் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.