மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மதரசாவில், இளம் வயது அனாதை மாணவர்கள் ஆசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், எவ்வித இரக்கமுமின்றி அந்த ஆசிரியர் மாணவர்களை பிரம்பாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.
இந்நிலையில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் கல்வி கற்க வந்த சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்றத் தாக்குதல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கல்வி பயிலும் இடங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
