அதிமுக உருவான விதம் குறித்துப் பேசிய சசிகலா, ஒரு புதிய வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். “திமுக-விலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது அவருக்குப் புதிய கட்சித் தொடங்கும் எண்ணமே இல்லை; அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் ஒரு கட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தார். அந்தக் கட்சியை எடுத்துத்தான் எம்ஜிஆர் அதிமுக-வாக நடத்தினார்” என்று கூறினார்.
அதிமுக என்பது எம்ஜிஆர் உருவாக்கியது அல்ல, அது ஒரு தொண்டரால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதைச் சுட்டிக்காட்டிய சசிகலா, அந்தக் கட்சி இன்று ஒரு தனி நபரின் (ஈபிஎஸ்) பிடியில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டவே இந்த வரலாற்றைக் குறிப்பிட்டார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உழைப்பால் உருவான கட்சியை மீட்கவே தான் வந்திருப்பதாக அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
