சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆவேசமாக உரையாற்றினார். திமுக-வின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை இன்னும் 50 முதல் 60 நாட்களில் அந்தப் பிம்பத்தை இழக்கும் என்றும், ஆட்சிக்கு வந்தால் பணம் தருவதாகச் சொல்வதெல்லாம் நடக்காத காரியம் என்றும் அவர் விமர்சித்தார்.

​மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும், அதில் 170 முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதி அளித்தார். முக்கியமாக, கட்சியின் நிர்வாகிகளை யாராவது மிரட்டினாலோ அல்லது கை வைத்தாலோ, அடுத்த நிமிடமே 2000 கழகத்தினர் அங்கே வருவார்கள் என்றும், எதற்கும் பயப்படத் தேவையில்லை என்றும் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.