தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காகச் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் உடல் நலம் தேறி அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
