இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகத் தூய்மையான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு ஐயாவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தச் செய்தி கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
அங்கு ஐயாவின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த முதல்வர், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சைகள் மற்றும் அடுத்தகட்ட மருத்துவ நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
எளிமையின் சிகரமாக விளங்கும் நல்லகண்ணு ஐயா விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
