இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக சந்தித்து வரும் அடுத்தடுத்த தோல்விகள், எல்லைக்கப்பால் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்திய அணியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் வீரர்கள் மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். “அபிஷேக் சர்மா ஒரு திறமையான பேட்ஸ்மேன் கிடையாது, அவர் வெறும் ‘ஸ்லாக் பேட்ஸ்மேன்’ (Slag Batsman) தான்.
அதாவது பந்துகளைக் கண்ணை மூடிக்கொண்டு சுற்றும் ஒரு சாதாரண வீரர்” என விமர்சித்துள்ளனர். மேலும், இந்திய அணிக்கு ஒரு தோல்வி கிடைத்தால் போதும், அவர்களை மூச்சுவிடக் கூட அனுமதிக்காமல் வம்புக்கு இழுப்பதே சில பாகிஸ்தான் வீரர்களின் வேலையாகிவிட்டது.
இந்தியாவின் பேட்டிங் வரிசை சரிந்து வருவதையும், இளம் வீரர்களின் போதிய அனுபவமின்மையையும் கிண்டல் செய்யும் வகையில் அவர்கள் பேசி வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
