வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், வரவிருக்கும் தேர்தல் என்பது வெறும் தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல, அது ஒரு மாபெரும் போர் என்று வர்ணித்தார். “இது எனக்கும் முதல்வர் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் தனிப்பட்ட போர் அல்ல; மாறாக, தமிழக மக்களுக்கும் ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் நிறைந்த உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர்” என்று அவர் நேரடியாக முதல்வர் ஸ்டாலினைச் சாடினார். மக்கள் நலனைப் புறக்கணிக்கும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

​மேலும், “தமிழ்நாடு தான் விஜய்; விஜய் தான் தமிழ்நாடு” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், தன்னையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறினார். தீய சக்தியான திமுக-வுக்கும், தூய சக்தியான தவெக-வுக்கும் இடையேதான் இந்தத் தேர்தல் யுத்தம் நடைபெறப் போகிறது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக-வுக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.