அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்னாப்பிரிக்கா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களம் புகுந்த மில்லர், 63 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதற்கிடையில், சுந்தர் பந்துவீசும் போது மில்லர் ‘க்ரீஸை’ விட்டு முன்கூட்டியே வெளியேறியது சுந்தரை எரிச்சலடைய செய்தது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
— Break_The_Bad (@NoContexhuman) February 22, 2026
“>
இருப்பினும், மில்லர் மற்றும் பிரெவிஸ் ஜோடி அமைத்த 97 ரன் பார்ட்னர்ஷிப், தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு, இந்தப் போட்டியில் அபாரமாக வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டது.
