அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த 76 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்வி, இந்திய அணியின் அரையிறுதி கனவுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா சந்தித்துள்ள இந்த மோசமான தோல்வி, அணியின் நிகர ரன் விகிதத்தை (NRR) அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு கைநழுவி விடவில்லை; ஆனால் இனிவரும் போட்டிகள் ஒவ்வொன்றும் வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளன.

இந்தியா தனது அடுத்த போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் மெகா வெற்றியைப் பதிவு செய்து 4 புள்ளிகளைப் பெறுவதோடு, ரன் விகிதத்தை இமாலய அளவில் உயர்த்தினால் மட்டுமே இந்தியா பாதுகாப்பான இடத்தைப் பிடிக்க முடியும்.

“>

 

ஒருவேளை தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தால், இந்தியா 2 வெற்றிகளுடன் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். மாறாக, புள்ளிகள் சமநிலையில் முடிந்தால் ரன் விகிதமே இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்பதால், இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.