மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு முஸ்லிம் இளைஞர், “வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இந்து-முஸ்லிம் என்று பிரிவினை பார்க்காதீர்கள்” என மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மதங்களை விட மனிதநேயமும் நட்பும் தான் உயர்ந்தது என்பதை அவர் தனது நண்பனின் செயல் மூலம் விளக்கியுள்ளார்.
ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிப்பதற்காக (சஹ்ரி), அந்த முஸ்லிம் இளைஞரின் இந்து நண்பர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து மிக அன்புடன் சமையல் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. தனது நண்பன் நமாஸ் செய்வதற்கு வசதியாகவும், பகல் முழுவதும் பசியின்றி இருக்கவும் சத்தான உணவுகளை அவர் தயார் செய்துள்ளார்.
ஏற்கனவே நவராத்திரியின் போது அந்த முஸ்லிம் இளைஞர் தனது இந்து நண்பருக்காக இதுபோலவே செய்திருப்பதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார். “இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் சண்டை எதற்கு?” என்று அவர் கேட்கும் கேள்வி, வெறுப்பு அரசியல் செய்பவர்களுக்குச் சவுக்கடியாக அமைந்துள்ளது.
