நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அபாரமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வருண் சிறப்பாகப் பந்துவீசியும், அவருக்குப் பந்துவீச அதிக வாய்ப்பளிக்காமல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அநீதி இழைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பேட்டர்கள் தங்களது ஃபார்மைப் பயன்படுத்தி ரன்கள் குவிக்க அனுமதிக்கப்படுவது போல, விக்கெட் வேட்டையில் இருக்கும் வருண் போன்ற பந்துவீச்சாளர்களுக்கும் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
