கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட அந்த மனவேதனையைத் தனது அணி எப்போதோ கடந்துவிட்டதாகத் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உண்மையைச் சொல்லப்போனால், அந்தப் போட்டி முடிந்த பிறகு நாங்கள் அதைப்பற்றி ஒருமுறை கூடப் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வந்துவிட்டோம்” என்றார்.

30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த வெற்றியை இந்தியா பறித்துச் சென்றது தங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தாலும், தற்போது ஒரு புதிய உத்வேகத்துடன் களமிறங்குவதாகவும், கடந்த கால கசப்பான நினைவுகள் இன்றைய ஆட்டத்தைப் பாதிக்காது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.