நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் இடம்பெற்ற செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவை. இந்தப் படத்தில் வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பிறகு, ஸ்கிரிப்ட்டில் இல்லாத “பார்த்தாச்சுல்ல… வாங்க போலாம்!” என்ற வசனத்தை கவுண்டமணி எதார்த்தமாகச் சொல்லியுள்ளார்.

இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்துவிட, கவுண்டமணி மன்னிப்பு கேட்டார். ஆனால், அர்ஜுன் அந்த வசனத்தின் டைமிங்கை ரசித்து, அதையே படத்திலும் வைக்கச் சொன்ன சுவாரஸ்யமான தகவலை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனது திரைப்பயணம் மற்றும் ‘முதல்வன்’ படத்தின் தாக்கம் குறித்தும் அர்ஜுன் பேசியுள்ளார். மக்களின் ரசனைக்கு ஏற்ப படங்களை உருவாக்க விரும்புவதாகக் கூறிய அவர், ‘முதல்வன்’ படத்தின் புகழேந்தி கதாபாத்திரம் போன்ற ஒரு நபர் நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு நல்லது செய்ய வர வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

தற்போது அந்தப் புகழேந்தி கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு புதிய கதையைத் தயார் செய்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.