சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வியக்கத்தக்க வீடியோவில், நபர் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் மீது மிக லாவகமாக குதித்து ஏறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த நபர் ஓடும் குதிரையின் வேகத்திற்கு இணையாகச் செயல்பட்டு, எவ்வித தடுமாற்றமும் இன்றி அதன் முதுகில் ஏறி அமர்வது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இந்த சாகசம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், தற்போது இணையத்திலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்த நபர் குதிரையின் மேல் ஏறியதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அதன் முதுகில் நின்றுகொண்டு கயிறு தாண்டும் சாகசத்திலும் ஈடுபடுகிறார்.
View this post on Instagram
“>
மேலும் வேகமான குதிரை சவாரிக்கு இடையே உடல் சமநிலையைத் தவறவிடாமல் அவர் செய்த இந்த ஸ்டண்ட் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. துணிச்சலும் திறமையும் கலந்த இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய ஆபத்தான செயல்களை முறையான பயிற்சியின்றி யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
