தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்நாள் முழுவதும் திமுக எனும் ‘தீய சக்தியை’ எதிர்த்துப் போராடியவர் விஜயகாந்த் என்றும், அவர் உருவாக்கிய கட்சி இன்று அதே திமுகவுடன் கைகோர்த்திருப்பதை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேமுதிகவை பல்வேறு காலகட்டங்களில் அவமானப்படுத்தி, அக்கட்சிக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்த திமுகவுடன் தற்போது கூட்டணி அமைத்திருப்பது தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம் என பாஜக விமர்சித்துள்ளது.

“>