ந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் தாக்கம் எல்லைகளைக் கடந்து பாகிஸ்தான் வரை எதிரொலித்து வருகிறது. பாகிஸ்தான் அணியின் புதிய ‘மிஸ்டரி’ சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதற்கு தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ தான் காரணம் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் விளையாட்டை விட்டு விலகி, துபாயில் ஒரு சாதாரண நிறுவனத்தில் கொள்முதல் ஒருங்கிணைப்பாளராக (Salesman) பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது இந்தப் படத்தைப் பார்த்த அவர், ரயில்வே டிக்கெட் பரிசோதகராக இருந்து உலகப் புகழ்பெற்ற கேப்டனாக உயர்ந்த தோனியின் போராட்டமும் தனது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதை உணர்ந்துள்ளார்.

அந்த உத்வேகத்தில் தனது வேலையைத் துறந்து, மீண்டும் பாகிஸ்தான் திரும்பி கடினமாக உழைத்ததன் பலனாக, இன்று பாகிஸ்தான் தேசிய அணியில் இடம் பிடித்து சர்வதேச அரங்கில் ஜொலித்து வருகிறார்.

“சாதாரண மனிதர்களாலும் வரலாறு படைக்க முடியும் என்பதை தோனி எனக்குப் புரிய வைத்தார்” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.